விபத்து சம்பவம் ஒன்று தொடர்பில் கைது செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் விஜயதாஸ ராஜபக்ஷவின் மகன் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த நபரை 1 இலட்சம் ரூபா பிணையில் விடுதலை செய்ய கொழும்பு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
நேற்று இரவு இராஜகிரிய பகுதியில் நால்வரை விபத்துக்குள்ளாக்கி காயங்களுக்கு உள்ளாக்கிய சம்பவம் தொடர்பில் அவர் கைது செய்யப்பட்டிருந்தார்