விசேட சுற்றிவளைப்பு – போதைப்பொருட்களுடன் 449 பேர் கைது!!

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

நாடளாவிய ரீதியில் நேற்று வியாழக்கிழமை (ஜூன் 05) பொலிஸாரால்மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போதுபோதைப்பொருட்களுடன் 449 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ்ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

அதன்படி, ஹெரோயின் போதைப்பொருளுடன் 119 பேரும், ஐஸ்போதைப்பொருளுடன் 161 பேரும், கஞ்சா போதைப்பொருளுடன் 156 பேரும், கஞ்சா செடிகளுடன் 04 பேரும், போதை மாத்திரைகளுடன் 09பேரும்பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது 686 கிராம் 13 மில்லிகிராம்ஹெரோயின் போதைப்பொருளும், 205 கிராம் 605 மில்லிகிராம் ஐஸ்போதைப்பொருளும், 03 கிலோ 832 கிராம் 188 மில்லிகிராம் கஞ்சாபோதைப்பொருளும், 5133 கஞ்சா செடிகளும், 2276 போதை மாத்திரைகளும்பொலிஸாரால் கைப்பற்றப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு மேலும்தெரிவித்துள்ளது.

Share this Article