நெடுந்தீவு கிழக்கு சனசமூக நிலையத்தின் “வாழ்விற்கான பேரொளி வாசிப்பு” அமர்வு – 16 நாளையதினம் (05.11.2025) புதன்கிழமை காலை 9.30 மணிக்கு நெடுந்தீவு கிழக்கு சனசமூக நிலைய மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.
வாசிப்பை ஊக்கப்படுத்தும் வகையில் கதை கூறல் , மற்றும் மாணவர்களை நல்வழிப்படுத்தி நற்பிரஜைகளாக்கும் வகையில் நிகழ்வின் சிறப்பு வளவாளராக நெடுந்தீவு பிரதேச செயலக ஓய்வுநிலை முகாமைத்துவ சேவை அலுவலர் செல்வி எட்வேட் ஜெயசீலி அவர்கள் கலந்து கொள்ளவுள்ளார்.
அனைத்து சிறார்களும் கலந்து பயன்பெறுமாறு அன்புடன் அழைத்து நிற்கின்றனர் நிலைய நிர்வாகத்தினர்.