வாக்களித்த அனைவருக்கும் எனது நன்றியைத் தெரிவிக்கிறேன் – ரணில் விக்கிரமசிங்க.

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

சுயேட்சை ஜனாதிபதி வேட்பாளர் ரணில் விக்கிரமசிங்க, இன்று (செப் 21) காலை கொழும்பு பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்ட வாக்குப்பதிவு நிலையத்தில் தனது வாக்கினை செலுத்தினார்.

வாக்களித்த பிறகு அவர் கருத்து தெரிவித்தபோது, “எனக்கு வாக்களித்த அனைவருக்கும் என் நன்றியை தெரிவிக்கிறேன். இந்த வரிசையை நான் உருவாக்கியவன்.

நாடு ஒரு ஸ்திரமற்ற நிலைக்கு சென்றிருந்தால், இன்று நாம் வாக்களிக்க இயலாது. இந்த தேர்தல் இலங்கைக்கு ஒரு முக்கிய திருப்புமுனையாகும், இது பாரம்பரிய அரசியல் மற்றும் பொருளாதார கொள்கைகளிலிருந்து விலகி, ஒரு புதிய சமூக மற்றும் அரசியல் அமைப்பை உருவாக்கும் முக்கிய வாய்ப்பாகும்,” என்று ரணில் விக்கிரமசிங்க குறிப்பிட்டார்.

Share this Article