வாகன இலக்கத்தகடுகளை விரைவில் வழங்க ஏற்பாடு!!!

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

 

நீண்டகாலமாக நிலுவையில் உள்ள வாகன தகடுகளை வழங்குவதற்காகஅமைச்சரவையால் நியமிக்கப்பட்ட கொள்முதல் குழு முறையாக ஏலத்தைதிறந்துள்ளதாக மோட்டார் வாகன போக்குவரத்துத் திணைக்கள ஆணையாளர்நாயகம் கமல் அமரசிங்க தெரிவித்தார்.

இதற்கமைய இரண்டு முதல் மூன்று மாதங்களுக்குள் அதிகாரப்பூர்வமானசேதமாகாத இலக்க தகடுகளை வழங்குவதற்கு எதிர்பார்த்துள்ளதாகவும்ஆணையாளர் நாயகம் குறிப்பிட்டுள்ளார்.

இந்த குழு முன்வைக்கப்பட்ட விலைமனுக்களை மதிப்பாய்வு செய்துவருவதாகவும், போக்குவரத்து அமைச்சு விரைவில் சிறந்த விநியோகஸ்தரைஅங்கீகரிக்கும்.இரண்டு முதல் மூன்று மாதங்களுக்குள் அதிகாரப்பூர்வமானசேதமாகாத இலக்க தகடுகளை வழங்குவதற்கு மோட்டார் வாகன போக்குவரத்துதிணைக்களம் எதிர்பார்க்கிறது.

தொழில்நுட்ப மற்றும் பாதுகாப்பு தரநிலைகள், செலவுத் திறன், விநியோக திறன்மற்றும் விநியோகஸ்தர் நம்பகத்தன்மைக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.பெப்ரவரியில் தனிப்பட்ட வாகனங்களுக்கான இறக்குமதி தடைநீக்கப்பட்டதிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டு பதிவு செய்யப்பட்ட 15000 க்கும்மேற்பட்ட சிற்றூந்து,வேன்களும் 80,000 க்கும் மேற்பட்ட உந்துருளிகளும்அதிகாரப்பூர்வ தகடுகளுக்காகக் காத்திருக்கின்றன.

தகடுகளுக்கான பற்றாக்குறை காரணமாக, மோட்டார் வாகன போக்குவரத்துதிணைக்களம் தற்காலிகமாக அச்சிடப்பட்ட அல்லது கையால் எழுதப்பட்டஇலக்கங்களை வெளியிட்டுள்ளதுடன் அவை செல்லுபடியாகும் எனகாவல்துறைக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக மோட்டார் வாகன போக்குவரத்துத்திணைக்கள ஆணையாளர் நாயகம் கமல் அமரசிங்க தெரிவித்துள்ளார்.

Share this Article