பாரி அறக்கட்டளை, கல்விக்கான சமூகப்பணி அமையத்தால் வவுனியா தெற்கு கல்வி வலயத்துக்கு உட்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு ஒரு லட்சத்து 51 ஆயிரத்து 200 ரூபா பெறுமதியான “பாரி சுயகற்றல்” ஏடுகள் நேற்று (ஏப்ரல் 4) வழங்கப்பட்டன.
இலங்கை கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலை, கோமரசன் குளம் மகாவித்தியாலயம், நெடுக்குளம் கலைமகள் வித்தியாலயம் மற்றும் சிதம்பரபுரம் ஸ்ரீநாகராஜா வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளைச் சேர்ந்த 2023 ஆண்டு க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ள 150 மாணவர்களுக்கு இவை வழங்கப்பட்டன.