வவுனியா நீதிமன்றில் பணியாற்றும் அரச சட்டவாதி ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
கல்முனையை சேர்ந்த அவருக்கு நேற்றயதினம் பிசிஆர் பரிசோதனை முன்னெடுக்கப்பட்டது. இதன்போது அவருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. எனினும் தொற்று உறுதியான பின்னர் சட்டவாதி வவுனியாவிலிருந்து கல்முனைக்கு சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது