மேல், மத்திய, தென் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் தற்போது நிலவும் காலநிலை எதிர்வரும் 24 மணித்தியாளங்களுக்கு தொடர்ந்து நீடிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இன்று (20) காலை 8.30 மணி முதல் 11.30 மணி வரையில் கம்பஹா மாவட்டத்தின் மினுவங்கொட பகுதியில் 109 மில்லி மீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதனால் நாட்டின் பல்வேறு வீதிகளில் நீரில் மூழ்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் பின்னதூவ மற்றும் இம்மதுவ இடையிலான பகுதியில் ஏற்பட்ட மண் சரிவு காரணமாக தெற்கு அதிவேக நெடுஞ்சாலை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இதேவேளை, ஐந்து மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை கட்டிட ஆய்வு அமைப்பினால் விடுக்கப்பட்டுள்ளது.
காலி, களுத்துறை, கொழும்பு, இரத்தினபுரி மற்றும் கேகாலை ஆகிய மாவட்டங்களுக்கு இந்த மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த எச்சரிக்கை நாளை காலை 9.00 மணி வரையில் நடைமுறையில் இருக்கும் என தெரிவிக்கப்படுகின்றது.