வற்றாப்பளையில் அவலோன் நிறுவனம் சிரமதானம்!!

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய வருடாந்த பொங்கல் திருவிழா நிறைவுற்றதைத் தொடர்ந்து,  அவலோன் நிறுவனம் தனது பணியாளர்களுடன் இணைந்து தன்னார்வ அடிப்படையில் ஆலய வளாகம் மற்றும் சுற்றுப்புறப் பகுதிகளைச் சுத்தம் செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றது.

ஒவ்வொரு ஆண்டும் இவ்வாறான சமூகப் பொறுப்புணர்வுமிக்க செயற்பாடுகளை தொடர்ந்து முன்னெடுத்து வருவது மிகவும் பாராட்டத்தக்க விடயமாகும். குறிப்பாக, ஆலயத்தின் முன்பகுதியை முழுமையாகச் சுத்தம் செய்யும் பணிகளை அவர்கள் மேற்கொண்டுள்ளதுடன், அவர்களது பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இலாப நோக்கத்துடனோ அல்லது சேவை நோக்கத்துடனோ இயங்கும் நிறுவனங்கள் சமூக நலனை முன்னிறுத்தி இவ்வாறான பொதுநலச் செயற்பாடுகளில் ஈடுபடுவது சமூகப் பொறுப்புணர்வின் சிறந்த எடுத்துக்காட்டாகும். சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் பொது இடங்களின் தூய்மையைப் பேணுவதில் இத்தகைய பங்களிப்புகள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை.

Share this Article
Leave a comment