வருமான வரி செலுத்துவோருக்கு அறிவிப்பு- உள்நாட்டு இறைவரித் திணைக்களம் !

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

வரி செலுத்தத் தகுதியான அனைவரும் 2023/2024 ஆண்டுக்கான வருமானவரியை செப்டம்பர் 30ஆம் திகதிக்கு முன்னர் செலுத்த வேண்டும் என உள்நாட்டுஇறைவரித் திணைக்களம் அறிவித்துள்ளது.

குறித்த கால அவகாசத்துக்குள் வரி செலுத்தத் தவறினால் அபராதம் மற்றும் வட்டிஅறவிடப்படுவதோடு, தள்ளுபடி செய்யப்படவோ குறைக்கப்படவோ மாட்டாதுஎன்றும் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அத்தோடு, நிலுவை வரித் தொகையை செலுத்துவோர் எதிர்வரும் ஒக்டோபர்30ஆம் திகதிக்கு முன்னர் செலுத்த வேண்டும் என்றும் உள்நாட்டு இறைவரித்திணைக்களம் நினைவூட்டியுள்ளது.

இது தொடர்பான மேலதிக தகவல்களை பெற விரும்புவோர் 1944 என்றஇலக்கத்துக்கு தொடர்புகொள்ளலாம் அல்லது அருகிலுள்ள பிராந்தியஅலுவலகத்துக்கு சென்று மேலதிக விபரங்களை பெற்றுக்கொள்ள முடியும்

Share this Article