அழிந்து வரும் பறவை இனமான water Turkey – நீர்வான் கோழி Anhinga anhinga எனும் வலசப்பறவை ஒன்று இன்றைய தினம் (ஜீன் – 06) வன ஜீவராசிகள் திணைக்கள பிராந்தியப் பணிப்பாளர் திரு மாரிமுத்து பரமேஸ்வரன் அவர்களால் பாதுகாக்கப்பட்டது.
அம்புலி ஓடை தும்பளைப் பகுதிக்கு வருகை தந்த பறவையினம் பறக்கமுடியாது நோய்வாய்ப்பட்ட நிலையில் அதனைக் கண்ணுற்ற இயற்கை ஆர்வலரான திரு.அருணாச்சலம் கலைச்செல்வன் அவர்கள் இவ்விடயத்தினை பரமேஸ்வரன் அவர்களது கவனத்திற்கு கொண்டு வந்தார்.
உடனடியாக விரைந்து செயற்பட்ட இணைப்பாளர் அவர்கள் சம்பவ இடத்திற்கு வன ஜீவராசிகள் திணைக்களத்தின் உத்தியோகத்தரினை குறிப்பிட்ட இடத்திற்கு அனுப்பி பக்குவமாக பறவையினை மீட்டு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டது.
சிகிச்சையின் பின்னர் மீண்டும் அப்பறவையின் வாழ்விடமான குளக்கரைக்கு கொண்டு சென்று விடப்பட்டது.
ஆழிந்து வரும் பறவையினங்களைப் பாதுகாக்க வேண்டிய பணி ஒவ்வொருவருக்கும் உண்டு என்பதனை உணர்ந்து செயற்படுதல் நன்று