வட மாகாணத்தில் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட மாவட்டமாக மன்னார்

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

மாவட்டமானது 40 வருட வரலாற்றில் கண்டிராத  வெள்ளப் பாதிப்பினை எதிர்கொண்டு மாவட்டத்தின் ஒட்டு மொத்த மக்களும் பாதிப்படைந்துள்ளனர்.

இதற்கமைய 30 ஆயிரத்து 569 குடும்பங்களைச் சேர்ந்த ஒரு இலட்சத்து 27 ஆயிரத்து 269 அங்கத்தவ்களும்  22 முழுமையாகவும் 822  வீடுகள் பகுதியளவிலும் பாதிப்படைந்துள்ளதோடு   15 ஆயிரம் வரையான கால்நடைகளை காணவில்லை. இவற்றில் ஒரு சில ஆயிரம் கால் நடைகள் இறந்த நிலையில் மீட்கப்பட்டாலும்  எஞ்சியவை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டிருக்கலாம் என அஞ்சப்படுகின்றது.

மாவட்டத்தில் மன்னார் பிரதேச செயலாளர் பிரிவு சற்று குறைந்த பாதிப்பை எதிர்நோக்கி இருந்தாலும் நானாட்டான் ,முசலி   மற்றும் மாந்தை மேற்கு பிரதேசங்கள் மிகப் பெரும் பாதிப்பினை எதிர் நோக்கியது.

கால்நடைகளே வாழ்வாதாரமாக  காணப்படும் பிரதேசமான மன்னார் மாவட்டத்தில் சுமார் 15 ஆயிரம் கால்நடைகள் இறந்து அல்லது காணாமல் போய் உள்ளதாக  அதி்ச்சித் தகவல்கள் தெரிவிக்கின்றன.

எஞ்சியுள்ள பல ஆயிரம் கால் நடைகளும் நோய் வாய்ப்பட்டுள்ளதனால்  வடமாகாண கால்நடை உற்பத்தி மாகாண பணிப்பாளர் தலைமையில் விசேட கால் நடை வைத்தியர்கள் அங்கே பயணித்து எஞ்சிய கால்நடைகளின் உயிரைக் காக்க நடவடிக்கை எடுத்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது

Share this Article