வடமாகாணத்தில் உயர்தர பரீட்சைக்கு 17 ஆயிரத்து 555 மாணவர்கள் தோற்றுவர்

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

வடமாகாணத்தில் 139 பரீட்சை நிலையங்களில் 17 ஆயிரத்து 55 5 பரீட்சாத்திகள் க.பொ.த உயர்தர பரீட்சைக்கு தோற்றவுள்ளனர் என மாகாணக்கல்விப் பணிப்பாளர் ரி.யோன் குயின்ரஸ் தெரிவித்தார். அவர் தெரிவிக்கையில்-

க.பொ.த உயர்தரப் பரீட்சை நாளை திங்கள் கிழமை (23 ஜனவரி) ஆரம்பமாக உள்ளது. வடமாகாணத்தில் 15 ஆயிரத்து 156 பாடசாலை பரீட்சாத்திகளும் 2 ஆயிரத்து 399 தனிப்பட்ட பரீசாத்திகளும் பரீட்சைக்கு தோற்றவுள்ளனர்.

மாணவர்களின் தியாகங்கள் பெற்றோர், ஆசிரியர், அதிபர்களின் அர்ப்பணிப்புகளால் பரீட்சையில் தோற்றும் மாணவர்கள் வெற்றி பெறுவீர்கள் என நம்புகிறேன். கா.பொ.த உயர்தரப் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கு எதிர்வரும் நாட்களில் நிதானமாகவும் தெளிவாகவும் நம்பிக்கையுடனும் பரீட்சையை எதிர் கொள்வதற்கு தயாராகவேண்டும்.

எவ்வளவு கற்றிருக்கிறோம் என்பது முக்கிய மல்ல. உரிய நேரத்தில் வினாக்களை விளங்கிக் கொண்டு பதில் எழுதுவதில்தான் தங்கியுள்ளது. ஆகவே பரீட்சையை எதிர்கொள்ளும் மாணவர்கள் நம்பிக்கையுடன் தோற்றி வெற்றி பெற எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்-என்றார்

Share this Article