வடமாகாணத்திற்கான மின் விநியோகத்தில் எதிர்வரும் ஒக்டோபர் 26, 2025 ஞாயிற்றுக்கிழமை காலை 6.00 மணி முதல் மாலை 07.00 மணி வரைதற்காலிகத் தடை ஏற்படும் என இலங்கை மின்சாரசபை தெரிவித்துள்ளது.
வவுனியா–மன்னார் 220kV மின் பரிமாற்ற வடத்தினை மாற்றியமைக்கும்வேலைகள் நடைபெறுவதால், 132kV வவுனியா – புதிய அநுராதபுர மின் பரிமாற்றகட்டமைப்பானது துண்டிக்கப்படவுள்ளது.
மன்னார் மாவட்டம் தவிர்ந்த வடக்கின் யாழ்ப்பாணம், கிளிநொச்சி , முல்லைத்தீவு ,வவுனியா ஆகிய மாவட்டங்களில் 13 மணித்தியாலங்கள் மின்சாரம்தடைப்படுமென இலங்கை மின்சார சபையினர் அறிவித்துள்ளனர்.