வடக்கு மாகாண சுகாதார அமைச்சில் புதிய நியமனங்கள்!

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

வடக்கு மாகாண சுகாதார அமைச்சின் கீழ் உள்ள போசணையாளர் 05 மற்றும் சமூக உளநல உத்தியோகத்தர் 01 பதவிகளுக்கான வெற்றிடங்களை நிரப்புவதற்காக நடாத்தப்பட்ட போட்டிப் பரீட்சை மற்றும் நேர்முகப் பரீட்சை மூலம் தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு நியமனக் கடிதங்கள் வழங்கப்பட்டன.

வடக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் ஜெயராணி பரமோதயன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் இந்நியமனக் கடிதங்களை வடக்கு மாகாண பிரதம செயலாளர் தனுஜா முருகேசன் வழங்கிவைத்தார்.

போசணையாளர் நியமனங்கள்

பின்வரும் நிலையங்களுக்கு தலா ஒருவர் வீதம் நியமிக்கப்பட்டுள்ளனர்:

பிராந்திய மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனை, வவுனியா

பிராந்திய மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனை, மன்னார்

மாவட்ட வைத்தியசாலை, கிளிநொச்சி

மாவட்ட வைத்தியசாலை, வவுனியா

மாவட்ட வைத்தியசாலை, மன்னார்

சமூக உளநல உத்தியோகத்தர் நியமனம்

ஆதார வைத்தியசாலை, தெல்லிப்பளை

இந்த நியமனங்கள் மூலம் வடக்கு மாகாணத்தில் போஷாக்கு மற்றும் மனநல சேவைகள் மேலும் வலுப்பெறுவதுடன் குறிப்பாக மாவட்ட மற்றும் பிராந்திய மட்டங்களில் சுகாதார சேவைகளின் தரம் உயர்வதற்கான முக்கியமான படியாக இது கருதப்படுகிறது.

இந்நிகழ்வில் வடக்கு மாகாண சுகாதார அமைச்சின் உதவிச் செயலாளர் மற்றும் நிர்வாக உத்தியோகத்தர் உள்ளிட்டோர் கலந்து கொண்டு வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.

Share this Article
Leave a comment