வடக்கு மாகாண சபையின் உள்ளூராட்சி மன்றங்களுக்காகத் தெரிவு செய்யப்பட்ட 14 வருமான பரிசோதகர்களுக்கான (Revenue Inspectors) நியமனக் கடிதங்களை வழங்கும் நிகழ்வு, அண்மையில் (01.12) ஆளுநர் செயலகத்தில் நடைபெற்றது.
வடக்கு மாகாணத்துக்கு 131 வருமானப் பரிசோதகர் ஆளணி அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், 51 வெற்றிடங்கள் காணப்பட்டன. அதில் 14 வெற்றிடங்களை நிரப்புவதற்கு தற்போது அனுமதி கிடைக்கப்பெற்றதற்கு அமைவாகவே இந்த நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளது.
இயற்கைப் பேரிடர் காரணமாக எளிமையாக நடைபெற்ற இந்நிகழ்வில் வடக்கு மாகாண ஆளுநர், ஆளுநரின் செயலாளர், வடக்கு மாகாண உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர், வடக்கு மாகாண பிரதிப் பிரதம செயலாளர் (நிர்வாகம் மற்றும் பயிற்சியும் ஆளணியும்), வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் மற்றும் அமைச்சின் உதவிச் செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர்.