வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் எதிர்வரும் 13.10.2024 முதல்20.10.2014 வரை மழை!!

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

எதிர்வரும் 13ம் திகதி தென் கிழக்கு வங்காள விரிகுடாவில் தாழமுக்கம் ஒன்றுஉருவாகும் வாய்ப்புள்ளது. இது 15.10.2024 அன்று வடக்கு வடமேற்கு திசைநோக்கி நகர்ந்து அதன் பின் 18.10.2024 அல்லது 19.10.2024 அளவில் தமிழ்நாட்டின் வடக்கு பகுதிக்கும் ஆந்திராவின் தெற்கு பகுதிக்கும் இடையில் ஆழ்ந்தகாற்றழுத்த தாழ்வு மண்டலமாக கரையைக் கடக்கும் வாய்ப்புள்ளது.

இத்தாழமுக்கத்தோடு இவ்வாண்டுக்கான வடகீழ் பருவக்காற்றின் உடைவும்ஏற்படும்எனவே எதிர்வரும் 13.10.2024 முதல் 20.10.2014 வரை வடக்கு மற்றும் கிழக்குமாகாணங்களின் பல பகுதிகளுக்கும் கனமானது முதல் மிகக் கனமானது வரைமழை கிடைக்கும் வாய்ப்புள்ளது.

இத்தாழமுக்கத்தோடு இணைந்து அதிக மழை கிடைக்கும் வாய்ப்புள்ளதனால்இவ்வாண்டுக்கான பெரும் போக நெற் செய்கைக்கான விதைப்பை  மேற்கொள்பவர்கள் இந்த மழை நாட்களைக் கருத்தில் கொள்வது சிறந்தது என பேராசிரியர் நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார்.

Share this Article