08.12.2024 ஞாயிற்றுக்கிழமை இரவு 7.30 மணி வானிலை அவதானிப்பு
தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் தோற்றம் பெற்ற காற்றழுத்த தாழ்வு நிலைமேற்கு வடமேற்கு திசை நோக்கி நகர்ந்து தற்போது பாணமையிலிருந்து தென்கிழக்கு திசையில் 548 கி.மீ. தொலைவில் காணப்படுகின்றது. இது அடுத்து வரும்நாட்களில் மேற்கு வடமேற்கு திசை நோக்கி நகர்ந்து எதிர்வரும் 10.12.2024 அன்று இலங்கையின் கிழக்கு கடற்கரைக்கு சமாந்தரமாக (கிழக்குமாகாணத்திலிருந்து 230 கி.மீ. தொலைவிலேயே அதன் மையம் காணப்படும்) வடக்கு வடமேற்கு திசை நோக்கி நகரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதன் காரணமாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் உட்பட்ட நாட்டின் பலபகுதிகளுக்கும் நாளை முதல் எதிர்வரும் 13.12.2024 வரை சில இடங்களில்மிதமான மழையும் சில இடங்களில் கனமழையும் கிடைக்கும் வாய்ப்புள்ளது. குறிப்பாக எதிர்வரும் 10, 11 மற்றும் 12ம் திகதிகளை உள்ளடக்கிய 72 மணித்தியாலங்களில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் சில இடங்களில்150 மி.மீ. க்கு கூடுதலாக திரட்டிய மழைவீழ்ச்சி பதிவாக வாய்ப்புள்ளது.
இன்று இரவு முதல் வடக்கு, கிழக்கு மற்றும் தென்கிழக்கு கடற்பகுதிகள்கொந்தளிப்பான நிலையில் காணப்படும் என்பதனால் மீனவர்கள் கடலுக்குசெல்வதை தவிர்ப்பது சிறந்தது.
இந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக வடக்கு மற்றும் கிழக்குமாகாணங்களின் வளிமண்டல சாரீரப்பதன் மாற்றம் காரணமாக இன்று முதல்அடுத்த சில நாட்களுக்கு குளிரான வானிலை நிலவும்.
அதேவேளை எதிர்வரும் 14.12.2024 அன்று இந்தோனேசியாவின் பண்டா அச்சேமாநிலத்திற்கு வடக்கே காற்றழுத்த தாழ்வு நிலை ஒன்று உருவாகும். இது சிறியஅளவிலான புயலாக மாறுவதற்கு அதிக வாய்ப்புக்கள் உள்ளன. இதுவும்ஆரம்பத்தில் மேற்கு, வட மேற்கு திசை நோக்கி நகர்ந்து பின்னர் வடக்குவடமேற்கு திசை நோக்கி நகரும் வாய்ப்புள்ளது. தற்போதைய நிலையில் இதன்நகர்வுப் பாதையும், நகரும் திசையும் கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படும்இடமும் அவசியம் கவனிக்கப்பட வேண்டியது. இது தொடர்பான மேலதிகவிபரங்கள் பின்னர் அறிவிக்கப்படும்.