22.12.2024 ஞாயிற்றுக்கிழமை நண்பகல் 12.00 மணி வானிலை அவதானிப்பு.
கடந்த 14.12.2024 அன்று வங்காள விரிகுடாவில் உருவாகிய காற்றழுத்த தாழ்வுநிலை இன்னமும் கரையைக் கடக்காமல் இந்தியாவின் ஆந்திர மாநிலத்தின்விசாகப்பட்டினத்தில் இருந்து தென்கிழக்காக 498 கி.மீ. தூரத்தில் வங்காளவிரிகுடாவில் காணப்படுகின்றது. இதன் மையத்துக்கு கிடைக்க வேண்டிய மறைவெப்பச் சக்தி (Latent Heat Energy) போதியளவு கிடைக்காமையினால் அதுவிருத்தியடையவில்லை. இது மேலும் இரண்டு நாட்கள் கடற்பகுதியில்நிலைகொண்டு பின்னர் மீண்டும் வடக்கு வடமேற்கு திசை நோக்கி நகரும் எனஎதிர்பார்க்கப்படுகிறது. இது எங்கே கரையைக் கடக்கும் என தெளிவாகவரையறுக்க முடியவில்லை. வங்காள விரிகுடாவில் தோற்றம் பெறுகின்றவளிமண்டல அமுக்க குறைவோடு தொடர்புடைய நிகழ்வொன்று ஒரே வலயத்தில்10 நாட்களுக்கு மேல் இருப்பது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.
காலநிலை மாற்றத்தின் காரணமாக ஏற்படக்கூடிய பௌதீக ரீதியானபாதிப்புக்களில் ஒன்று எதிர்வு கூற முடியாத அதேவேளை அதிகரித்தநிகழ்வெண்ணிக்கையைக் கொண்ட அதி தீவிர வானிலை நிகழ்வுகள். அதனைநாம் தற்போது அனுபவிக்கின்றோம். ஆகவே நாம் காலநிலை மாற்றம் என்றவிடயத்தில் இனியும் அக்கறையில்லாமல் இருக்க முடியாது.
இது இவ்வாறிருக்க,
எதிர்வரும் 27.12.2024 அன்று வங்காள விரிகுடாவில் அந்தமான் தீவுகளுக்குஅருகே மீண்டும் ஒரு தாழமுக்கம் உருவாகும் வாய்ப்புள்ளது. ஆனால் இதிலுள்ளஆறுதல் இது மேற்கு திசை நோக்கி நகர்ந்து இலங்கைக்கு கீழாக அரபிக் கடலைசென்றடையும் என்பது( ஆனால் எதிர்வரும் நாட்களில் வங்காள விரிகுடாவின்வளிமண்டல நிலைமைகள் மாற்றம் பெற்றால் நகர்வு திசை மாற்றமடையலாம்).
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பல பகுதிகளுக்கு இன்று(22.12.2024) முதல் 26ம் திகதி வரை சில பகுதிகளுக்கு மிதமான மழை கிடைக்கும்வாய்ப்புள்ளது.
அதேவேளை புதிதாக உருவாகவுள்ள தாழமுக்கம் காரணமாக எதிர்வரும்29.12.2024 முதல் 03.01.2025 வரை வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின்பல பகுதிகளுக்கும் மிதமானது முதல் கனமானது வரை மழை கிடைக்கும்வாய்ப்புள்ளது.