வடக்கு கிழக்கில் இன்று முதல் 15 ஆம் திகதிவரை மிதமான மழை!

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பல பகுதிகளுக்கும் இன்று முதல் (ஒக். 04) எதிர்வரும் ஒக்.15 இற்கும் இடையிடையே மிதமான மழை கிடைக்கும்வாய்ப்புள்ளதாக யாழ் பல்கலைக்கழக புவியியல்துறை பேராசிரியர் நாகமுத்துபிரதீபராஜா தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்..

வெப்பச் சலன செயற்பாட்டினால் உருவாகும் இம்மழை இடி மின்னலுடன்இணைந்த மழையாக இருக்கும்.

இக்காலப்பகுதியில் பரவலாக அனைத்துப் பிரதேசங்களும் மழையைப் பெறும். ஆனால் ஒரே நாளில் அனைத்துப் பிரதேசங்களும் மழையை கிடைக்கப்பெறாது. சில இடங்களில் இம்மழை கனமழையாகவும் கிடைக்கக்கூடும்.

2025/2026 காலபோக நெற் செய்கையில் புழுதி விதைப்பைமேற்கொண்டவர்களுக்கும் மேற்கொள்ள இருப்பவர்களுக்கும் இம்மழைபயனுள்ளதாக அமையும்.

இவ்வருட வடகீழ்ப் பருவக்காற்று மழை ஒக்டோபர்  23 ஆம் திகதி அளவில்ஆரம்பமாகும். இவ்வாண்டின்  வடகீழ்ப் பருவக்காற்றின் உடைவு தாழமுக்கத்தோடுஆரம்பமாகும். இதனால் ஒக்டோபர் மாதத்தின் இறுதி வாரத்தில் கன மழைகிடைக்கும் வாய்ப்புள்ளது.

எதிர்வரும் நவம்பர் மாதத்தின் நடுப்பகுதியில் இருந்து டிசம்பர் மாதத்தின்நடுப்பகுதி வரை 05 தாழமுக்க நிகழ்வுகள் வங்காள விரிகுடாவில் தோன்றும்வாய்ப்புள்ளது.  இதில் இரண்டு தாழமுக்கங்கள் புயலாகவும் மாற்றமடையும்வாய்ப்புள்ளது.

இதனால் நவம்பர் மாதத்தின் 20ம் திகதி முதல் டிசம்பர் மாதத்தின் 15 ம் திகதிவரை செறிவான மழைவீழ்ச்சி கிடைக்கும் வாய்ப்புள்ளது.

ஆகவே இவ்வாண்டின் காலபோக நெற் செய்கையின் சேற்று விதைப்பைமேற்கொள்ளும் விவசாயிகள் அதற்கேற்ற வகையில் திட்டமிட்டு மேற்கொள்வதுசெறிவான கனமழை மூலம் நெற்பயிர்கள் பாதிப்படைவதைத் தவிர்க்கும் என்றார்.

Share this Article