வடக்கு , கிழக்கில் அத்துமீறி கட்டப்பட்டுள்ள விகாரைகளுக்கு பயணிப்பதைதவிர்க்குமாறு சிங்கள மக்களிடம் வடமாகாண நீதி சமாதானத்திற்கும்நல்லிணக்கத்திற்குமான பணியகம் வேண்டுகோள் விடுத்துள்ளது
வட,கிழக்கில் மேற்கொள்ளப்படும் ஆக்கிரமிப்புக்களுக்கு எதிராக வடமாகாணநீதி சமாதானத்திற்கும் நல்லிணக்கத்திற்குமான பணியக இயக்குனர் அருட்பணிசூ.யே. ஜீவரட்ணம் அ.ம.தி கண்டன அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்
அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
யுத்தத்தின் பிற்பாடு ஏறக்குறைய 16 வருடங்கள் கடந்து விட்ட நிலையில் தேசியஒருமைப்பாட்டையும் இன, மதங்களுக்கிடையிலான நல்லிணக்கத்தையும்ஏற்படுத்த வேண்டிய காலத்தில் இவற்றையெல்லாம் விடுத்து இன்னும்அடக்குமுறைகளும் உரிமை மறுப்புக்களும் தான்தோன்றித்தனமானபொறுப்பற்ற அரசியல் அதிகார வீச்சுக்களும் சிறுபான்மை இன மக்களை நோக்கிஅவ்வப்போது செயல்படுத்தப்பட்டு கொண்டிருப்பது வேதனை அளிக்கின்றது.
கடந்த பங்குனி மாதம் 28ம் திகதி காணி நிர்ணய உரிமைச்சட்டத்தின் கீழ்வெளியிடப்பட்டிருந்த அரசு வர்த்தமானியானது தமிழ் மக்களினுடையகாணிகளை அபகரிக்கின்ற நோக்கமாக கொண்டது என்று பல தரப்புக்களும்அச்சம் வெளியிட்டு கண்டனங்களை தெரிவித்தபோது இறுதியில் அதைஇரத்துசெய்தமையை வரவேற்கின்ற வேளை, இன்னும் இன மத சமூகநல்லிணக்கத்திற்கு பாதகத்தை விளைவிக்கும் செயற்பாடான தனியார்காணிகளுக்குள் அத்துமீறிய பௌத்தவிகாரைகளின் கட்டுமானங்கள் மற்றும்புராதன தொல்பொருள் இடங்கள் என்று அடையாளப்படுத்தப்பட்டுள்ளபகுதிகளில் எந்த வித அகழ்வு மற்றும் கட்டுமான பணிகள் மேற்கொள்ள முடியாதுஎன்று சொல்லப்படுகின்ற இடங்களில் பௌத்த விகாரைகளின் கட்டுமானபணிகள் மேற்கொள்ள அனுமதிக்கப்படுகின்ற சூழ்நிலைகள் எல்லாம்வெளிப்படையாக மத வேறுபாட்டையும் பிரிவினை மனப்பான்மையையும்அதிகார வாக்கம் வெளிப்படுத்துகிறது. இதை வடமாகாண நீதி சமாதானநல்லிணக்கத்திற்கான பணியகம் வன்மையாக கண்டிக்கிறது.
அதேவேளை வட கிழக்கு மாகாணங்களில் தமிழ் மக்களின் உரித்துக்காணிகளைகையகப்படுத்தி, தனியார் காணிகளுக்குள் அத்துமீறி கட்டப்படுகின்றவிகாரைகளை நோக்கி பௌர்ணமி தினங்களிலும் விடுமுறை நாட்களிலும்வருகின்ற பௌத்த மத சகோதர சகோதரிகளுக்கு ஒரு பகிரங்கவேண்டுகோளையும் விடுக்கிறது. அத்துமீறி அடுத்தவர் காணிகளுக்குள்கட்டப்படுகின்ற மத தலங்களில் ஆன்மீகத்தை தேடுவது அர்த்தமற்றதும்அநியாயமானதும் என்பதை புரிந்து கொண்டு வட கிழக்கு மாகாணங்களில் சட்டவிரோத இடங்களில் அமைக்கப்பட்டுள்ள மத வழிபாட்டுத்தலங்களை நோக்கியதங்களின் ஆன்மீக பயணங்கள் வேதனையளிக்கிறது என்பதை புரிந்துகொண்டுநல்மனதோடு அவற்றை தவிர்த்து தமிழ் மக்களின் உரிமைகளை அங்கிகரித்துஅவர்களுக்குரிய காணிகளை மீள ஒப்படைக்க முயற்சிப்பதும் உங்களுடையகடமை என்பதையும் வலியுறுத்துகின்றோம்.
அது மாத்திரம் இன்றி தேசிய பொருளாதாரத்திற்கு பங்களிப்பு செய்யக்கூடியவளமான நிலங்கள், காணிகள் எல்லாம் இராணுவ கட்டுப்பாட்டுக்கு கீழ் இருந்துஅவற்றை எல்லாம் விடுவிக்க வேண்டிய தேவைப்பாடு உணரப்படுகின்ற வேளைஇப்படியான காணி அபகரிப்பு செயற்பாடுகள் தடை செய்யப்பட வேண்டும்என்பதையும் நீதி சமாதான நல்லிணக்கத்திற்குமான பணியகம் வலியுறுத்தவிரும்புகின்றது என்றுள்ளது.