யாழ்ப்பாணத்தில் இன்று (30) 12 பேருக்குக் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அத்துடன் புதுக்குடியிருப்பில் ஒருவருக்கும், தம்பலகொலப்பட்டின தனிமைப்படுத்தல் மையத்தில் உள்ள ஒருவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணத்தில் உடுவிலில் 8 பேருக்கும், தெல்லிப்பளையில் ஒருவருக்கும், சண்டிலிப்பாயில் 3 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
உடுவிலில் இனங்காணப்பட்ட 8 பேரில் 7 பேர் ஏற்கனவே இனங்காணபபட்ட தொற்றாளருடன் தொடர்பில் இருந்ததால் தனிமைப்படுத்தப்பட்டிருந்தவர்கள்
தெல்லிப்பளையில் தொற்றுடன் இனங்காணப்பட்டவர் ஏற்கனவே இனங்காணப்பட்ட தொற்றாளருடன் தொடர்பில் இருந்தமையால் தனிமைப்படுத்தப்பட்டிருந்தவர்.
சண்டிலிப்பாயில் தொற்றுடன் இனங்காணப்பட்ட மூவரும், ஏற்கனவே தொற்றாளருடன் தொடர்பில் இருந்தமையால் தனிமைப்படுத்தப்பட்டிருந்தவர்கள்.
புதுக்குடியிருப்பில் தொற்றுடன் இனங்காணப்பட்டவர் ஏற்கனவே தொற்றுக் கண்டுபிடிக்கப்பட்ட ஒருவரின் குடும்ப உறுப்பினராவார்.
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை ஆய்வுகூடம் மற்றும் யாழ்ப்பாணம் மருத்துவபீட ஆய்கூடம் என்பவற்றில் இன்று 676 பேரின் மாதிரிகள் பி.சி.ஆர். பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன. அதிலேயே தொற்றாளர்கள் கண்டுபிடிக்கப்பட்டனர்.