வடகொரியாவைச் சேர்ந்த போலி ஐடி (IT) ஊழியர்கள், செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நிறுவனங்களை ஏமாற்றி வேலைகளில் சேர்ந்து வருவதாக மைக்ரோசாப்ட் நிறுவனம் அதிர்ச்சியூட்டும் தகவலை வெளியிட்டுள்ளது.
அதிநவீன ஏஐ வாய்ஸ்-சேஞ்சிங் (Voice-changing) கருவிகள் மூலம் தங்களது குரல் மற்றும் உச்சரிப்பை மேலைநாட்டு நபர்களைப் போல மாற்றிப் பேசி, நேர்காணல்களில் இவர்கள் வெற்றி பெறுகின்றனர்.
மேலும், Face Swap போன்ற ஏஐ செயலிகள் மூலம் திருடப்பட்ட அடையாள அட்டைகளில் தங்களது முகங்களை இணைத்து, உண்மையான ஊழியர்கள் போலக் காட்டிக் கொள்கின்றனர்.
இவ்வாறு பணியில் சேரும் நபர்கள், தங்களுக்குக் கிடைக்கும் அதிகப்படியான சம்பளப் பணத்தை வடகொரியாவின் அணுஆயுதத் திட்டங்களுக்கு நிதியாக அனுப்பி வருவதாகக் கூறப்படுகிறது.
மைக்ரோசாப்ட் அமைப்பின் கூற்றுப்படி, இந்த ஏஜெண்டுகள் பணியில் சேர்ந்த பிறகு ஏஐ கருவிகளைப் பயன்படுத்தி மென்பொருள் குறியீடுகளை (Code) உருவாக்குவதுடன், நிறுவனங்களின் ரகசியத் தரவுகளையும் திருட வாய்ப்புள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.
இந்த மோசடியைத் தவிர்க்க, ஐடி ஊழியர்களைத் தேர்ந்தெடுக்கும் போது நேரடி வீடியோ நேர்காணல் அல்லது நேரில் சந்தித்து உறுதிப்படுத்துமாறு நிறுவனங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது