மத்திய வங்காள விரிகுடாவில் நாளை (நவம்பர் 14) தாழமுக்கம் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறதாக யாழ்ப்பாண பல்கலைக்கழக புவியியற்துறை சிரேஷ்ட விரிவுரையாளர் நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார்.
இன்று இரவு முதல் ஈரப்பதம் நிறைந்த காற்று வடக்கு மற்றும் கிழக்கு மாகாணத்திற்குள் வருகைதரும். எனவே இன்று இரவு முதல் எதிர்வரும் 18 ஆம் திகதி வரை வடக்கு மற்றும் கிழக்கு மாகாணத்தின் பல பகுதிகளுக்கும் கனமானது முதல் மிகக் கனமானது வரை மழை கிடைக்கும் வாய்ப்புள்ளது. குறிப்பாக 14,15 மற்றும் 16ம் திகதிகளில் பல பகுதிகளுக்கும் மிகக் கன மழைக்கு வாய்ப்புள்ளது.
இன்று முதல் வடக்கு மற்றும் கிழக்கு கடற்பகுதிகள் கொந்தளிப்பான நிலைமையில் காணப்படும் என்பதனால் மீனவர்கள் கடலுக்கு செல்வதில் அவதானமாக இருப்பது அவசியம்.
உருவாகவுள்ள தாழமுக்கத்தின் வளர்ச்சி மற்றும் அதன் நகர்வு பற்றிய விடயங்கள் பின்னர் இற்றைப்படுத்தப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.