லிட்ரோ எரிவாயு விலை குறைப்பு !

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

 

இன்று (ஜூலை02) நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் லிட்ரோ சமையல்எரிவாயுவின் விலை குறைக்கப்படுகிறது.

லிட்ரோ நிறுவனத் தலைவர் முதித பீரிஸ் இதனைத் தெரிவித்துள்ளார்.

இதற்கமைய, 12.5 கிலோகிராம் நிறையுடைய லிட்ரோ சமையல் எரிவாயுகொள்கலன் விலை 100 ரூபாவினால் குறைக்கப்படுகிறது.

இதன்படி, 12.5 கிலோகிராம் நிறையுடைய லிட்ரோ சமையல் எரிவாயு 3,690 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படவுள்ளது.

அதேநேரம், 5 கிலோகிராம் நிறையுடைய லிட்ரோ சமையல் எரிவாயு கொள்கலன்விலை 40 ரூபாவினால் குறைக்கப்படுகிறது.

இதன்படி, 5 கிலோகிராம் நிறையுடைய லிட்ரோ சமையல் எரிவாயு 1,482 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படவுள்ளது அத்துடன் 2.3 கிலோகிராம்நிறையுடைய லிட்ரோ சமையல் எரிவாயு விலை 18 ரூபா குறைக்கப்படுகிறது.

இதற்கமைய, 2.3 கிலோகிராம் நிறையுடைய லிட்ரோ சமையல் எரிவாயு 694 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படவுள்ளது

Share this Article