2021 ஆம் ஆண்டுக்கான அரசின் வரவு செலவுத் திட்டம் நாடாளுமன்றில் 97 மேலதிக வாக்குகளால் நிறைவேறியது.
இன்று (10) இடம்பெற்ற வரவு செலவு திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பின் போது ஆதரவாக 151 வாக்குகளும், எதிராக 54 வாக்குகளும் அளிக்கப்பட்டன.
இதேவேளை, தமிழ் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் இவ்வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.