முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க குற்றப் புலனாய்வுதிணைக்களத்தில் இருந்து வெளியேறியுள்ளார்.
இலங்கையில் மருந்து வகைகள் இறக்குமதி செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில்முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவினால் அளிக்கப்பட்டமுறைப்பாடு தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக ரணில் விக்கிரமசிங்க, இன்று புதன்கிழமை (ஜூன்11) பிற்பகல் 02.30 மணியளவில் குற்றப் புலனாய்வுதிணைக்களத்தில் முன்னிலையாகியிருந்தார்.
இதன்போது ரணில் விக்கிரமசிங்கவிடமிருந்து ஒரு மணி நேரம் வாக்குமூலம்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், வாக்குமூலம் வழங்கிய பின்னர் ரணில்விக்கிரமசிங்க குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் இருந்துவெளியேறியுள்ளார்.
இலங்கையில் மருந்து வகைகள் இறக்குமதி செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில்முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல குற்றப் புலனாய்வுதிணைக்களத்தில் முறைப்பாடு அளித்திருந்தார்.
இந்த முறைப்பாடு தொடர்பாக, அமைச்சர்கள் மற்றும் முன்னாள்அமைச்சர்களிடமிருந்து வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டமைகுறிப்பிடத்தக்கது.