By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
kumuthini image kumuthini image
  • முகப்பு
  • செய்திகள்
    • நெடுந்தீவு
    • தீவகம்
    • யாழ்
    • வன்னி
    • இலங்கை
    • உலகம்
  • கட்டுரை
  • விளம்பரம்
    • வாழ்த்துக்கள்
    • எழுத்துரு விளம்பரங்கள்
  • அறிவித்தல்
    • இறப்பு அறிவித்தல்
    • துயர் பகிர்வு
Reading: யாழ் மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவு சமாசத்தால் உயிரிழந்த கடற்படை வீரருக்கு இரங்கல்!
Share
Notification
Latest News
செம்மணியில் புதையுண்ட மக்களுக்கான நீதி போராட்டம் “அணையா தீபம்”!
யாழ்ப்பாணம்
இலங்கையில் இரண்டு மாதங்களுக்கான எரிபொருள் கையிருப்பு உள்ளது !
இலங்கைச் செய்தி
நயினாதீவுக்கான கட்டடப் பொருட்களை இறக்க மாற்று துறைமுகம்!
தீவகச் செய்தி
சிறப்பாக இடம்பெற்ற பெரியதம்பனை அறநெறி பாடசாலைக்கு அடிக்கல் நாட்டும் விழா!
வன்னிச் செய்திகள்
சாவகச்சேரி பிரதேசசபை தவிசாளர் தமிழ் அரசுக் கட்சி!
யாழ்ப்பாணம்
Aa
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....
Search
  • Home
    • Home News
  • Categories
  • Bookmarks
    • Customize Interests
    • My Bookmarks
  • More Foxiz
    • Blog Index
    • Sitemap
Follow US
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து.... > Blog > செய்திகள் > யாழ்ப்பாணம் > யாழ் மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவு சமாசத்தால் உயிரிழந்த கடற்படை வீரருக்கு இரங்கல்!
யாழ்ப்பாணம்

யாழ் மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவு சமாசத்தால் உயிரிழந்த கடற்படை வீரருக்கு இரங்கல்!

Last updated: 2024/06/25 at 4:02 PM
Published June 25, 2024 316 Views
Share
1 Min Read
SHARE

நெடுந்தீவு கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்களை கைதுசெய்வதற்கு முற்பட்ட இலங்கை கடற்படை வீரர் ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில், இது ஓர்  துன்பியல் சம்பவம் என யாழ் மாவட்ட கடற் தொழிலாளர் கூட்டுறவு சங்கங்களின் சமாசங்களின் சம்மேளனத் தலைவர் ஸ்ரீ கந்தவேல் புனித பிரகாஷ் தெரிவித்தார்.

யாழ் மாவட்ட கடற் தொழிலாளர் கூட்டுறவு சமாசத்தில் இன்று (ஜூன் 25) செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது” இந்திய அத்துமீறிய இழுவை படகுகள் எமது கடல் பகுதிக்குள் நுழைந்து எமது மீனவர்களின் வாழ்வாதாரத்தை தொடர்ச்சியாக அழித்து வருகின்றன.

இதன் காரணமாக நாம் கடற்படையினருக்கு பல்வேறு அழுத்தங்களை வழங்கி வரும் நிலையில், எங்களது வாழ்வாதாரத்தை காப்பாற்றுவதற்காக அத்துமீறும் இந்திய மீனவர்களைக் கைது செய்து வருகின்றனர்.

இவ்வாறான ஒரு நிலையில் நேற்றைய தினம் திங்கட்கிழமை (ஜூன் 24) இரவு இந்திய இழுவைப் படகை கைது செய்ய முற்பட்டபோது கடற்படை வீரர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

நமது வாழ்வாதாரத்தை காப்பாற்றுவதற்காக போராடிய அந்த கடற்படை வீரருக்கு எமது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதோடு அவரின் குடும்பத்தினருக்கும் எமது அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறோம்.

கடற்படை வீரர் உயிரிழந்துள்ள நிலையில் எவர் பக்கமானாலும் உயிர் இழப்பை நாம் விரும்பவில்லை.

இந்திய மீனவர்களிடம் வினையமாக வேண்டிக்கொள்வது என்னவெனில் உங்கள் கடல் எல்லையைத்  தாண்டி எங்கள் கடல் எல்லைக்கு வர வேண்டாம்.

அவ்வாறு நீங்கள் வருவதால் கடற்படையினர் உங்களை விரட்டுவதற்காக கடலில் போராட வேண்டிய தேவை ஏற்படுகிறது. இதன் காரணமாக தேவையற்ற சம்பவங்கள் கடலில் இடம்பெறுகின்றது” இவ்வாறு தெரிவித்துள்ளார்.

You Might Also Like

செம்மணியில் புதையுண்ட மக்களுக்கான நீதி போராட்டம் “அணையா தீபம்”!

சாவகச்சேரி பிரதேசசபை தவிசாளர் தமிழ் அரசுக் கட்சி!

வாள்வெட்டில் ஈடுபட்ட மூவர் இந்தியா தப்பிச் செல்லுகையில் கைது!

யாழ்ப்பாணத்தில் ஐஸ் போதைப்பொருளுடன் பெண் உட்பட கைது !

யாழில் 1000 வீதிகள் அபிவிருத்தி வேலைத் திட்டங்களின் ஆரம்ப நிகழ்வு !!

ஓமந்தை கார் விபத்தில் படுகாயமடைந்த சுவாமிநாத ஐயர் பலி!

வழுக்கையாற்று புனரமைப்பிற்கான பல்கலைக்கழக மாணவர் ஆய்வு ஆரம்பம் – நிலத்தடி நீர், விவசாய தேவைகளை பூர்த்தி செய்ய முயற்சி

யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபராக திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் நியமனம்!!

SUB EDITOR June 25, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Previous Article இந்திய மீனவர்களுடன் மோதல் – கடற்படை வீரர் பலி! நெடுந்தீவு கடற்பரப்பில் சம்பவம்
Next Article அனலைதீவு மக்களின் இறங்குதுறை பிரச்சினைக்கும் அதன் ஏதுநிலைகள் குறித்து ஆராய்ந்து சாதகமான பதில் வழங்கப்படும் – அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு!
- Advertisement -
Ad imageAd image

உங்களுக்கும் வாய்ப்பு....

உங்கள் பிரதேச செய்திகள், கட்டுரைகள், கவிதைகள் மற்றும் ஆக்கங்களைப் Delft Media தளத்தில் பிரசுரிக்க மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள். தரமறிந்து ஆக்கங்கள் பிரசுரிக்கப்படும்.
ஆக்கங்களை அனுப்ப: contact@delftmedia.com

பிந்திய செய்திகள்

செம்மணியில் புதையுண்ட மக்களுக்கான நீதி போராட்டம் “அணையா தீபம்”!
இலங்கையில் இரண்டு மாதங்களுக்கான எரிபொருள் கையிருப்பு உள்ளது !
நயினாதீவுக்கான கட்டடப் பொருட்களை இறக்க மாற்று துறைமுகம்!
சிறப்பாக இடம்பெற்ற பெரியதம்பனை அறநெறி பாடசாலைக்கு அடிக்கல் நாட்டும் விழா!

You Might Also Like

யாழ்ப்பாணம்

செம்மணியில் புதையுண்ட மக்களுக்கான நீதி போராட்டம் “அணையா தீபம்”!

June 23, 2025
யாழ்ப்பாணம்

சாவகச்சேரி பிரதேசசபை தவிசாளர் தமிழ் அரசுக் கட்சி!

June 23, 2025
யாழ்ப்பாணம்

வாள்வெட்டில் ஈடுபட்ட மூவர் இந்தியா தப்பிச் செல்லுகையில் கைது!

June 22, 2025
யாழ்ப்பாணம்

யாழ்ப்பாணத்தில் ஐஸ் போதைப்பொருளுடன் பெண் உட்பட கைது !

June 22, 2025
யாழ்ப்பாணம்

யாழில் 1000 வீதிகள் அபிவிருத்தி வேலைத் திட்டங்களின் ஆரம்ப நிகழ்வு !!

June 21, 2025
யாழ்ப்பாணம்

ஓமந்தை கார் விபத்தில் படுகாயமடைந்த சுவாமிநாத ஐயர் பலி!

June 21, 2025
யாழ்ப்பாணம்

வழுக்கையாற்று புனரமைப்பிற்கான பல்கலைக்கழக மாணவர் ஆய்வு ஆரம்பம் – நிலத்தடி நீர், விவசாய தேவைகளை பூர்த்தி செய்ய முயற்சி

June 21, 2025
யாழ்ப்பாணம்

யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபராக திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் நியமனம்!!

June 20, 2025

About Us

இலங்கையின் வடக்கே நெடுந்தீவை மையமாகக் கொண்டு செயற்படும் செய்தி இணையத்தளம்

Subscribe

Subscribe to our newsletter to get our newest articles instantly!

[mc4wp_form]

DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....

© Delftmedia All Rights Reserved.

Removed from reading list

Undo
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Lost your password?