யாழ் – மாவட்ட உதவி தொழில் ஆணையாளராக ஶ்ரீமதி ராஜமல்லிகை சிவசுந்தரசர்மா அவர்கள் நேற்றையதினம் (ஒக். 16) யாழ்ப்பாணத்தில் உள்ள மாவட்ட தொழில் அலுவலகத்தில் கடமையைபொறுப்பேற்றுக் கொண்டுள்ளார்.
தொழில் ஆணையாளர் (நி்ர்வாகம்) R.B இரேஷா உதயங்கனி அவர்களிடமிருந்து உதவித் தொழில் ஆணையாளராக நியமனக் கடிதத்தினை தொழில்திணைக்களத்தில் வைத்து உத்தியோகபூர்வமாக
நேற்றுமுன்தினம் (ஒக்.15) பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கதாகும்.
இதேவேளை கடந்த 8 வருடங்களாக யாழ் மாவட்ட உதவி தொழில் ஆணையாளராக பணியாற்றிய அருமைத்துரை அன்ரன் தனேஸ் அவர்கள் 2025 ஒக். 01 தொடக்கம் குடிவரவு குடியகல்வு திணைக்களத்திற்கு மாற்றம் பெற்றுச் சென்றமை குறிப்பிடத்தக்கது.