யாழ் மாவட்டத்தில் தமிழரசு-135, தேசிய மக்கள் சக்தி-81, தமிழ் காங்கிரஸ்-79 உறுப்பினர்களுடன் உள்ளனர்.

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

உள்ளூராட்சி சபைத் தேர்தலில் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் இலங்கை தமிழரசுக் கட்சி ஆதிக்கம் செலுத்தியுள்ளது. மொத்தமாக 88,443 வாக்குகளைப் பெற்ற இந்தக் கட்சி, 135 உறுப்பினர்களை வெற்றிகரமாகத் தேர்ந்தெடுத்துள்ளது.

இதன் அடிப்படையில், யாழ்ப்பாணம் மாநகரசபை, நல்லூர் பிரதேச சபை, வல்வெட்டித்துறை நகரசபை, நெடுந்தீவு, வேலணை, வலிகாமம் மேற்கு, வடக்கு, தென்மேற்கு, தெற்கு, கிழக்கு பிரதேச சபைகள், வடமராட்சி தென்மேற்கு, பருத்தித்துறை, சாவகச்சேரி பிரதேச சபைகள் உள்ளிட்ட பல உள்ளூராட்சி நிர்வாகங்களில் தமிழரசுக் கட்சி அதிக ஆசனங்களைப் பெற்றுள்ளது.

மற்றொரு பக்கம், பருத்தித்துறை நகரசபை மற்றும் சாவகச்சேரி நகரசபை ஆகியவற்றில் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது.

மேலும், காரைநகர் பிரதேச சபையில் “சுயேட்சைக்குழு” வெற்றி பெற்றுள்ளதோடு, ஊர்காவற்றுறை பிரதேச சபையில் ஈழ மக்கள் ஜனநாயக கட்சி வெற்றி பெற்றுள்ளது.

மொத்த வாக்குகளின் அடிப்படையில் கட்சி வாரியான பெறுபேறுகள் பின்வருமாறு:

  • இலங்கை தமிழரசுக் கட்சி – 88,443 வாக்குகள் – 135 உறுப்பினர்கள்

  • தேசிய மக்கள் சக்தி – 56,615 வாக்குகள் – 81 உறுப்பினர்கள்

  • அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் – 51,046 வாக்குகள் – 79 உறுப்பினர்கள்

  • ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி – 35,647 வாக்குகள் – 46 உறுப்பினர்கள்

  • ஈழ மக்கள் ஜனநாயக கட்சி – 18,011 வாக்குகள் – 32 உறுப்பினர்கள்

  • தமிழ் மக்கள் கூட்டணி – 11,893 வாக்குகள் – 15 உறுப்பினர்கள்

  • ஐக்கிய மக்கள் சக்தி – 4,103 வாக்குகள் – 4 உறுப்பினர்கள்

  • ஐக்கிய தேசியக் கட்சி – 3,397 வாக்குகள் – 5 உறுப்பினர்கள்

  • சுயேட்சைக்குழு (இலக்கம் 1) – 2,402 வாக்குகள் – 3 உறுப்பினர்கள்

  • சுயேட்சைக்குழு (இலக்கம் 2) – 3,973 வாக்குகள் – 6 உறுப்பினர்கள்

Share this Article