ஐ.பி.சி.தமிழின் அணுசரணையுடன் யாழ்.மாநகர சபை ஏற்பாடு செய்துள்ள முத்தமிழ் விழா, நல்லூர் ஸ்ரீ தூர்க்கா மணிமண்டபத்தில்,யாழ்.மாநகர சபையின் ஆணையாளர் ஜெயசீலன் தலைமையில் நாளை (ஜூலை 29) சனிக்கிழமை பிற்பகல் 4.30 மணிக்கு நடைபெறவுள்ளது.
மேற்படி விழாவில் பிரதம விருந்தினராக,வடக்கு மாகாண ஆளுநர் திருமதி பி.எஸ்.எம் சார்ள்ஸ் கலந்து கொண்டு சிறப்பிக்கவுள்ளார்.
சிறப்பு விருந்தினர்களாக வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் செ.பிரணவதாதன், ஐபிசி தமிழ் குழுமத்தின் தலைவர் கந்தையா பாஸ்கரன் ஆகியோர் கலந்து சிறப்பிக்கவுள்ளனர். நிகழ்வில்,இயல் துறைக்காக கலாபூஷணம் கோகிலா மகேந்திரனுக்கும். இசைத்துறைக்காக கலாபூ ஷணம் எம்.பி.பாலகிருஸ்ணனுக்கும். நாடகத் துறைக்காக கலாகிர்த்தி சாந்தினி சிவநேசனுக்கும், 2023 ஆண்டிற்கான அரசகேசரி விருது வழங்கப்படவிருப்பதுடன்,
விழாவில் இசையரங்கு இசை நாட்டிய நாடக அரங்கு மற்றும் இயல் அரங்கு என்ற மூன்று பிரிவுகளிலும் கலை நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன.
எமது மண்ணில் இன்றைய சூழலில் உயர்கல்வியும்,மனித நேயம்,கலாசார பண்பாடுகளும் எனும் தலைப்பில் தெல்லிப்பழை ஸ்ரீதுர்க்காதேவி ஆலயத் தலைவரும்,சைவத்தமிழ் அறிகுருமான செஞ்சொற்செல்வர் கலாநிதி ஆறு.திருமுருகனை நடுவராகக் கொண்ட பட்டிமன்றமும் நடைபெறவுள்ளது.