யாழ்ப்பாணம் மாநகரில் பொலித்தீன் மற்றும் பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றி சுற்றுச்சூழலை சுத்தப்படுத்தும் பணி நாளை ஜூலை 12ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணிமுதல் முன்னெடுக்கப்படவுள்ளது.
யாழ்ப்பாணம் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் வணிகசூரிய தலைமையில் 250 படையினரின் பங்களிப்புடன் யாழ்.மாநகரை தூய்மைப்படுத்தும் பணி முன்னெடுக்கப்படவுள்ளது.
யாழ்ப்பாணம் மாநகரில் 9 பிரதான இடங்களில் காணப்படும் பிளாஸ்டிக், பொலித்தீன் கழிவுப் பொருட்களை அகற்றி நகரைச் சுத்தப்படுத்தும் நோக்குடன் இந்தப் பணி சுழற்சி முறையில் முன்னெடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.