யாழ் போதனா வைத்தியசாலையில் சுகாதார முகாமைத்துவ சேவைகள் உத்தியோகத்தராக பணியாற்றி வந்த தங்கராசா ராஜ்குமார் (வயது30) என்பவர் தவறான முடிவெடுத்து உயிரிழ்ந்துள்ளார்
குப்பிளான் பகுதியைச் சேர்ந்த இவர் இன்று (ஒக்.11) அதிகாலை வேளை தனதுவீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவரது சடலம் மீதான உடற்கூற்று சோதனைகள் யாழ் போதனாவைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்டபின் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
மரணம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தெல்லிப்பளைப் பொலிஸார்மேற்கொண்டு வருகின்றனர்.