யாழ் போதனா வைத்தியசாலையில் மதுபோதையில் நுழைந்த நபர் காவலாளியை கடித்து காயப்படுத்திய சம்பவம் நேற்று (டிசம்பர் 19) மாலை நடந்துள்ளது.
மதுபோதையில் இருந்த நபர் நோயாளர் விடுதிக்குள் நுழைய முயன்றபோது, அவரை தடுக்க முயன்ற காவலாளியுடன் ஏற்பட்ட மோதலின் போது இந்த சம்பவம் இடம்பெற்றது.
35 வயதுடைய அந்த நபரை காவலாளிகள் பிடித்து, யாழ்ப்பாணம் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
காயமடைந்த காவலாளி யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெறுகிறார்.
சம்பவம் குறித்து யாழ்ப்பாணம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.