இன்று ஞாயிற்றுக்கிழமை (30/11) காலை பொன்னாலை கடற்பகுதிக்கு மீன்பிடித் தொழிலுக்குச் சென்ற யாழ். பொன்னாலை பகுதியைச் சேர்ந்த நாகு கிருஷ்ணமூர்த்தி (வயது 62) காணாமல் போயுள்ளதாக உறவினர்கள் பொலிஸாரிடம் முறையிட்டனர்.
பலத்த காற்று மற்றும் கொந்தளிக்கும் கடல் காரணமாக படகு கவிழ்ந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படும் நிலையில், கடற்படையினரும் மீனவர்களும் நடத்திய தேடுதலின் போது இன்று மாலை அவரது உடல் கரையொதுங்கிய நிலையில் மீட்கப்பட்டது.