யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்துக்குப் புதிய துணைவேந்தரை ஜனாதிபதி தெரிவு செய்யவுள்ள நிலையில் புதிய துணைவேந்தர் பதவிக்குப் போட்டியிடுபவர்களில் மூவரைத் தெரிவு செய்வதற்கான விசேட பேரவைக் கூட்டம் இன்று செவ்வாய்க்கிழமை ( 09/12) யாழ் பல்கலைக்கழகத்தில் இடம்பெற்றது.
இதன்போது
1. பேராசிரியர் தி. வேல்நம்பி (உயர் பட்டப்படிப்புக்கள் பீடப் பீடாதிபதி )

2. பேராசிரியர் கு.மிகுந்தன் ( விவசாய பீட முன்னாள் பீடாதிபதி )

3. பேராசிரியர் ஆர்.சுரேந்திரகுமாரன் ( மருத்துவபீடப் பீடாதிபதி )

ஆகியோர் இம்முறை துணைவேந்தர் பதவிக்கு போட்டியிட்டு முதல் மூன்று இடங்களையும் பெற்றுள்ளார்கள்.
இவர்கள் மூவரில் ஒருவரை புதிய துணைவேந்தராக ஜனாதிபதி தெரிவு செய்வார் என்பது குறிப்பிடத்தக்கது.