வேகக் கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் மின் கம்பத்துடன்மோதியதால் ஏற்பட்ட விபத்தில் சுழிபுரம் விக்டோரியா கல்லூரி மாணவன் ஒருவர்உயிரிந்துள்ளார். இச் சம்பவம் இன்று காலை சுழிபுரம் சந்திப்பகுதியில் இடம்பெற்றது.
சுழிபுரம் விக்டோரியா கல்லூரியின் கணிதப் பிரிவில் கல்வி கற்கும் மாணவனானமுருகசோதி சிறிபானுசன் என்பவரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார். அவருடன் பயணித்த 15 மதிக்கத்தக்க மாணவன் ஒருவர் படுகாயமடைந்த நிலையில்யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்தச் சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது, சம்பவத்தில் உயிரிழந்தமாணவனும், படுகாயமடைந்தவரும் மோட்டார் சைக்கிளில் மூளாய் நோக்கிபயணித்த நிலையில் சுழிபுரம் சந்தியில் வேகக்கட்டுபாட்டை இழந்த மோட்டார்சைக்கிள் மின்சார கம்பத்துடன் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் வட்டுக்கோட்டை பொலீஸார் மேலதிக விசாரணைகளைமேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.