05.12.2024 வியாழக்கிழமை முற்பகல் 11.00 மணி வானிலை அவதானிப்பு.
வங்காள விரிகுடாவில் எதிர்வரும் 07ம் திகதி புதிய ஒரு காற்று சுழற்சிஉருவாகுவது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இது மேற்கு வடமேற்கு திசை நோக்கிநகர்ந்து இலங்கைக்கு அருகாக வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதேவேளை எதிர்வரும் 19.12.2024 அன்று மீண்டும் ஒரு தாழமுக்கம் வங்காளவிரிகுடாவில் உருவாகும் வாய்ப்புள்ளது. இதுவும் மேற்கு வட மேற்கு திசைநோக்கி நகரும் என எதிர்பார்க்கப்படுகிறது. சில மாதிரிகள் இது ஒரு புயலாகவலுப்பெறும் என வெளிப்படுத்துகின்றன. அதேவேளை சில மாதிரிகள் இதனைகிழக்கு மாகாணத்திற்கருகாக நகர்ந்து வடக்கு மாகாணத்திற்கு மிக அண்மித்துவரும் என காட்டுகின்றன. எவ்வாறாயினும் இதனை அடுத்த சில நாட்களின்பின்னரே உறுதிப்படுத்த முடியும்.
எனவே எதிர்வரும் 09.12.2024 முதல் 25.12. 2024 வரை வடக்கு மற்றும் கிழக்குமாகாணங்களின் பல பகுதிகளுக்கும் மிதமானது முதல் கனமானது வரை மழைகிடைக்கும் வாய்ப்புள்ளது. குறிப்பாக எதிர்வரும் 11.12.2024 முதல் 15.12.2024 வரையும் பின்னர் 21.12.2024 முதல் 25.12. 2024 வரையும் சில பகுதிகளில் மிகக்கன மழைக்கு வாய்ப்பு உள்ளது.
அதேவேளை எதிர்வரும் 09.12.2024 வரை வடக்கு மற்றும் கிழக்குமாகாணங்களின் சில பகுதிகளுக்கு இடையிடையே மிதமான மழைக்கு வாய்ப்புஉள்ளது.
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் மீனவர்கள் எதிர்வரும் 09.12.2024 முதல்மறு அறிவித்தல் வரை கடற்பகுதிகளுக்கு செல்வதை தவிர்ப்பது சிறந்தது.
மேலதிக விபரங்கள் பின்னர் அறிவிக்கப்படும்.