யாழ்ப்பாணத்தில் நாளை மாபெரும் தொழில் சந்தை !

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

யாழ் மாவட்ட இளைஞர் யுவதிகளின் தொழில் வாய்ப்புக் கனவை நனவாக்கும்முகமாக நாளையதினம் (ஜூலை05)  மாபெரும் தொழில் வாய்ப்பு முகாம் ஒன்றுயாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ளது.

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி குமாரசுவாமி மண்டபத்தில் நடைபெறும் குறித்ததொழில் முகாமில் 30 நிறுவனங்கள் தமது நிதுவனங்களின் வெற்றிடங்களைநிவர்த்தி செய்வதற்கான எதிர்பார்ப்புடன் பங்கேற்கவுள்ள்ளதாக ஏற்பாட்டாளரும்Dewmas நிறுவனத்தின் பணிப்பாளருமான விக்னேஸ்வரன் ஐங்கரன் யாழ் ஊடக அமையத்தில் இன்று(ஜூலை 04) தெரிவித்துள்ளார்.

ஊடக அமையத்தில் ஊடக சந்திப்பை நடத்திய அவர் மேலும் கூறுகையில் –

பல தொழில் சந்தைகள் நடைபெற்றலும் இம்முறை நடைபெறும் தொழில்வாய்ப்பு முகாம் பெரும் வரப்பிரசாதமாக அமையும் என நம்புகின்றோம்.

அத்துடன் குறித்த  முகாம் ஊடாக முதற்கட்டமாக 150 இளைஞர் யுவதிகளுக்கு உடனடி வாய்ப்புவழங்கப்படவுள்ளதுடன்  1000 இற்கும் அதிகமான தொழிலை எதிர்பார்போரும்வருகை தருவர் என்று அவர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Share this Article