யாழ்ப்பாணம், பண்ணைப் பகுதியில் உள்ள நபர் ஒருவரின் வீட்டில், சட்டவிரோதமான முறையில் சொத்து சேர்த்ததாகக் கருதப்படும் சந்தேகத்தின் அடிப்படையில், இன்றைய தினம் (07/12) காவற்துறையினரும் விசேட அதிரடிப் படையினரும் இணைந்து திடீர்ச் சோதனை நடத்தியுள்ளனர்.
சட்டவிரோதமாக சொத்து குவித்த நபர்கள் மீது யாழ்ப்பாணம் குற்றத்தடுப்புப் பிரிவு காவற்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணைகளை முன்னெடுத்துள்ள நிலையில், அதன் ஒரு கட்டமாகவே யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் பெற்றுக்கொள்ளப்பட்ட தேடுதல் அனுமதிக்கு அமைய இந்தச் சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காவற்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.