யாழ்ப்பாணத்தில் காந்தி நினைவு தினம்

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

மகாத்மா காந்தியின் நினைவு தினத்தை முன்னிட்டு இன்று (September 30) யாழ் இந்திய துணை தூதரகத்தின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணத்தில் சைக்கிள் பேரணி முன் எடுக்கப்பட்டது.

மகாத்மா காந்தியின் நினைவு தினத்தை முன்னிட்டு யாழ் இந்திய துணைத் தூதரகத்தின் ஏற்பாட்டில் யாழ்ப்பாண நகரில் உள்ள காந்தி அவர்களின் சிலை முன்றிலிருந்து வட்டுக்கோட்டை யாழ்ப்பாண கல்லூரி வரை சைக்கிள் பேரணி இன்றைய தினம் முன்னெடுக்கப்பட்டது.

 

குறித்த பேரணி காலை ஏழு முப்பது மணி அளவில் யாழ் இந்திய துணைத் தூதுவரின் பங்கு பற்றுதலோடு மும்மதத் தலைவர்களின் ஆசியோடு ஆரம்பமாகி வட்டுக்கோட்டை யாழ்ப்பாண கல்லூரி வரைசென்றடைந்தது,

 

மகாத்மா காந்தியின் நினைவு தினம் இன்றை தினம் வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரியில் மிக சிறப்பாக இடம் பெற்றமை குறிப்பிடத்தக்கது.
Share this Article