யாழில் விபத்து – சிகிச்சை பலனின்றி 29 இளைஞர் பலி!

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

யாழில் விபத்தில் சிக்கிய இளைஞன் ஒருவர் சிகிச்சை பலனின்றி நேற்றுதிங்கட்கிழமை (மே19) உயிரிழந்துள்ளார்.

ஊரெழு கிழக்கு, சுன்னாகம் பகுதியைச் சேர்ந்த செல்வராசா அனிஸ்ரன் (வயது29) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

குறித்த இளைஞனும் அவரது நண்பரும் கடந்த மே11ஆம் திகதி யாழில் இருந்துபருத்தித்துறை நோக்கி சென்ற போது வாகனம் ஒன்றை முந்திச் செல்லமுற்பட்டனர். இதன்போது பருத்தித்துறையில் இருந்து யாழ் நோக்கி வந்தமோட்டார் சைக்கிளுடன் மோதி விபத்துக்குள்ளாகி காயமடைந்தனர்.

இதன்போது காயமடைந்த நால்வரும் யாழ் போதனா வைத்தியசாலையில்சிகிச்சை பெற்று வந்த நிலையில், மூவர் வீடு திரும்பினர்.

இருப்பினும் குறித்த இளைஞன் சிகிச்சை பலனின்றி நேற்று (மே19) காலைஉயிரிழந்துள்ளார். அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரணவிசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டபின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

Share this Article