இலங்கையில் தேசிய ஊடகக் கொள்கைத் திட்டமொன்றை வகுத்தல் தொடர்பாக விஷேட குழுக்களுடனான கலந்துரையாடல் நேற்றுமுன்தினம் (ஒக்ரோபர் 25) யாழ்ப்பாண மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
தற்போதைய அரசாங்கத்தின் கொள்கைகள் மற்றும் முன்னுரிமைகளுக்கு இணங்க வெகுசன ஊடக அமைச்சு ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தி திட்டத்துடன் இணைந்து இலங்கையில் ஊடகக் கொள்கைக்கான கட்டமைப்பொன்றை உருவாக்கும் பணியிலும் இலங்கை ஊடகத்துறைக்கான கொள்கை சட்டகமொன்றை அமைப்பதிலும் ஈடுபட்டு வருகிறது.
அதற்கமைய வெகுசன ஊடக அமைச்சினால் வடக்கு மாகாணத்தில் ஊடகவியலாளர்கள் மற்றும் ஊடக நிறுவனங்களுக்கான விஷேட குழுக் கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.
இதில் வெகுஜன ஊடக அமைச்சின் மேலதிக செயலாளர் என்.எ.கே.எல்.விஜேநாயக்க , முன்னாள் அரசாங்க தகவல் திணைக்களப் பணிப்பாளர் மொஹான்சமரநாயக்க , சிரேஷ்ட ஊடகவியலாளர் நாலக்க குணவர்த்தன, கலைப்பீடாதிபதி கலாநிதி.எஸ்.ரகுராம், உதவி மாவட்ட செயலாளர் எஸ்.சி.என்.கமலராஜன், சிரேஷ்ட ஊடகவியலாளர்கள், ஊடகவியலாளர்கள், சட்டத்தரணிகள் மற்றும் துறைசார் நிபுணர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டிருந்தனர்.