யாழ்ப்பாணத்திலுள்ள சமுர்த்தி வங்கிகளில் ஒன்றில் பணப்பரிமாற்ற தானியங்கி இயந்திரம் (ATM) வசதி மற்றும் அடகு கடன் சேவை ஒன்றினை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு அரசாங்க அதிபரால் முன்வைக்கப்பட்ட கோரிக்கையினை ஏற்று நடவடிக்கை எடுப்பதாக சமுர்த்தி குறுநிதி பணிப்பாளர் சம்மதம் தெரிவித்துள்ளார்

நேற்று (13/02) மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற சமுர்த்தி திணைக்களத்தினால் சமுர்த்தி வங்கி மற்றும் வங்கி சங்கங்களுக்கான சமுர்த்தி கடன் வழங்கல் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சித் திட்ட நிகழ்விலேயே இம்முடிவு எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
யாழ்ப்பாண மாவட்ட சமுர்த்திப் பணிப்பாளர் பொ. ஸ்ரீவர்ணன் அவர்களின் தலைமையில் யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் மற்றும் சமுர்த்தித் திணைக்களத்தின் குறுநிதிப் பணிப்பாளர் லால் கருணாதிலக ஆகியோரின் பங்குபற்றுதலுடன் இந்நிகழ்வு இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.