யாழில் காணியற்ற குடும்பங்களுக்கு அடுக்கு மாடி வீட்டுத் திட்டம் !!

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

யாழில் காணியற்ற குடும்பங்களுக்கு அடுக்கு மாடி வீட்டுத் திட்டம் அமைப்பதற்கான பொருத்தமான காணியை அடையாளப்படுத்தல் தொடர்பாக வீடமைப்பு நிர்மாணம் மற்றும் நீர் வளங்கள் அமைச்சின் செயலாளர் யாழ் அரசாங்க அதிபருடன் சந்தித்து விரிவாக கலந்துரையாடினார்.

இச் சந்திப்பு வீடமைப்பு நிர்மாணம் மற்றும் நீர் வழங்கல் அமைச்சின் செயலாளர் எந்திரி. எல். குமுடு லால் பொகவற்ர , மற்றும் மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் ஆகியோரிடயே நேற்றையதினம் (12.02) அரசாங்க அதிபர் அலுவலகத்தில் சந்தித்து கலந்துரையாடினார

இக் கலந்துரையாடலில் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் க.சிவகரன் மற்றும் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் (காணி) பா.ஜெயகரன் ஆகியோர் உடனிருந்தார்கள்.

மேலும் கலந்துரையாடலின் பின்னர் அமைச்சின் செயலாளருடன், அரசாங்க அதிபர் மற்றும் மேலதிக அரசாங்க அதிபர் (காணி) ஆகியோர் களவிஜயம் செய்து காணிகளை ஆய்வு செய்தமை குறிப்பிடத்தக்கது.

Share this Article