நெடுந்தீவு மகாவித்தியாலயத்தின் பழைய மாணவர்கள் சந்திப்பு இன்றையதினம்(மார்ச் 09) யாழ் கச்சேரிக்கு அருகிலுள்ள வை.எம்.சி.எ மண்டபத்த்தில் இடம்பெற்றது.
இதுவரைகாலமும் பாடசாலையில் கல்வி கற்பித்து மரணித்த அதிபர்கள்ஆசிரியர்கள், மாணவர்கள், மற்றும் ஊழியர்களது ஆத்மா சாந்தி வேண்டியபிரார்தனையுடன் நிகழ்வு ஆரம்பமானது.
இக்கலந்துரையாடலில் பாடசாலையின் பல்வேறு தேவைகள் ஆய்வுசெய்யப்பட்டதுடன் எதிர்கால செயற்பாடுகள் தொடர்பாக திட்டமிடப்பட்டது.
பாடசாலை அடுத்த வருடம் 80வது ஆண்டில் காலடி எடுத்து வைக்கவுள்ளதால், அதனை சிறப்பாக செய்வது தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது
இதேவேளை 80வது வருட நிகழ்வினை சிறப்பாக மேற்கொள்வதற்கான பொதுக்கலந்துரையாடல் இம் மாதம் 30 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 10.00 மணிக்கு நெடுந்தீவு மகாவித்தியாலய பொது மண்டபத்தில் நடாத்துவது என இக் கலந்துரையாடலில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இன்றைய கலந்துரையாடலில் வருகை தந்த அனைவரும் தங்களை அறிமுகம்செய்து கொண்டதுடன் சுமார் 50 வரையான பழைய மாணவர்கள் சந்திப்பிலேயேகலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கதாகும்.
இதேவேளை, பழைய மாணவர் சங்கத்தை மேலும் வலுப்படுத்தவும், 80வது ஆண்டு விழாவை சிறப்பாக முன்னெடுக்கவும், மேலும் நெடுந்தீவிற்கு வெளியிலும் யாழ்ப்பாணம் மற்றும் பிற பகுதிகளில் வசிப்பவர்களை ஒன்றிணைக்கவும் 11 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழு, வித்தியாலயத்தின் பழைய மாணவர் சங்க நிர்வாகத்தின் கீழ் செயல்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
இக் குழுவில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள்:
- இரா. தர்மரணட்ணம்
- வை. கருணைநாதன்
- அ. உதயநாதன்
- செ. ராஜ்குமார்
- டோ. யூட்கிங்
- இ. மருதலிங்கம்
- ம. பிரதீபன்
- சி. மயூரன்
- மா. பார்த்தீபன்
- த. ஜெயரட்ணம்
- அ. நிராஞ்சன்