யாழிலிருந்து வெளிமாவட்டங்களுக்கான தனியார் பேரூந்து சேவை மறு அறிவித்தல் வரும் வரை நிறுத்தம்
நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா தொற்று காரணமாக அனைத்து பொதுமக்கள் மற்றும் சாரதிகள், நடத்துனர்கள் அனைவரது பாதுகாப்பையும் கருத்தில்கொண்டும் யாழ் மாநகர முதல்வரின் அறிவுறுத்தல்களுக்கு அமைய நாளை 04/11/2020 தொடக்கம் மறு அறிவித்தல் வரை யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிமாவட்டங்களுக்கான அனைத்து பேரூந்துசேவைகளும் இடம்பெறமாட்டாது என்று வெளிமாவட்ட தனியார் போக்குவரத்து சங்கத்தலைவர் அறிவித்துள்ளார்.