மோல்ட்டா சர்வதேச கடலில் மீட்கப்பட்ட இலங்கை அகதிகள்!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

இத்தாலி, மோல்ட்டா சர்வதேச கடல் பகுதியில் நெரிசலான மீன்பிடி படகொன்றிலிருந்து 440 அகதிகள் மீட்கப்பட்டுள்ளனர் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்தத் தகவலை எல்லைகளற்ற மருத்துவர்கள் தொண்டு நிறுவனம் உறுதி செய்துள்ளது.

இத்தாலி செல்லும் நோக்குடன் படகில் பயணித்த இலங்கை, சிரியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், எகிப்து மற்றும் சோமாலியா ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்களே மீட்கப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்படுகின்றது.

8 பெண்கள் மற்றும் 30 சிறுவர்கள், குழந்தைகள் உட்பட மொத்தம் 440 பேர் தற்சமயம் Geo Barents கப்பலில் பாதுகாப்பாகவுள்ளனர் என்றும் எல்லைகளற்ற மருத்துவர்கள் தொண்டு நிறுவனம் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.

Share this Article