வலிந்து காணாமலாக்கப்பட்டோருக்கு என்ன நேர்ந்தது என்ற உண்மையைவெளிப்படுத்துமாறு கோரி முல்லைத்தீவு மாவட்ட வலிந்துகாணாமலாக்கப்பட்டோரின் உறவுகளால் தொடர் கவனயீர்ப்புப் போராட்டம்ஆரம்பிக்கப்பட்டு 8 வருடங்கள் பூர்த்தியடையும் நிலையில், அதனை முன்னிட்டுஇன்று சனிக்கிழமை (மார்ச் 08) வட்டுவாகலில் விசேட கவனயீர்ப்புப்போராட்டம் முன்னெடுப்பு.
இறுதிக்கட்டப்போரின்போது வலிந்து காணாமலாக்கப்பட்ட தமதுஅன்புக்குரியவர்களுக்கு என்ன நேர்ந்தது என்ற உண்மையைவெளிப்படுத்துமாறும், நீதியை நிலைநாட்டுமாறும் கோரி முல்லைத்தீவு மாவட்டஉறவுகளால் தொடர் கவனயீர்ப்புப்போராட்டம் ஆரம்பிக்கப்பட்டு மார்ச் மாதம் 8 ஆம் திகதியுடன் எட்டு வருடங்கள், அதாவது 2923 நாட்கள் இன்றுடன் பூர்த்தியடைகின்றன.
ஆனால் அக்கோரிக்கை இன்னமும் ஈடேறாத நிலையில், முல்லைத்தீவுமாவட்டத்தைச்சேர்ந்த வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்களால்இன்று காலை 10.00 மணிக்கு முல்லைத்தீவு, வட்டுவாகலில் விசேடகவனயீர்ப்புப்போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.
‘தாய்மார்களாக, பெற்றோராக, குடும்பமாக எமது உறவுகளைக் கண்டுபிடிக்கநீதிக்கான இந்த நீண்ட போராட்டத்தைத் தொடர்ந்து முன்னெடுக்கிறோம்‘ எனவட, கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கத்தின்முல்லைத்தீவு மாவட்ட உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.
அத்தோடு இன்றைய கவனயீர்ப்புப்போராட்டத்தை ‘போரின் இறுதி நாட்களில்வட்டுவாகல் பகுதியில் இலங்கை இராணுவத்திடம் ஒப்படைத்த எங்கள் உறவுகள்என்னவானார்கள்?’ எனும் பிரதான கேள்வியுடன் முன்னெடுத்திருந்தனர்.