முல்லைத்தீவு பட்டணமும் சூழலும் பிரதேசத்தை சுத்தமாகவும் பசுமையாகவும் பேணுவோம் எனும் தொனிப்பொருளில் இன்று(ஓகஸ்ட் 26) புதிய பஸ் தரிப்பிடத்தை அண்மித்த பகுதியை துப்பரவு செய்யும் பணி இடம்பெற்றது.
முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் திரு.அ.உமாமகேஸ்வரன் தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்டதுடன் மத்திய சுற்றாடல் அதிகார சபையின் அனுசரனையுடன் அண்மையில் சிறப்பாக நடைபெற்று முடிந்தது.
காலை 6.30 மணிதொடக்கம் காலை 8.00 மணிவரை இந்த சிரமதானப்பணி முன்னெடுக்கப்பட்டது.
இந்தத் திட்டம் முல்லைத்தீவு நகரத்தினை அழகு படுத்துதல் மற்றும் மரங்களை நடுதல் போன்ற நீண்டகால திட்டத்தின் ஓர் ஆரம்ப நிகழ்வாக அமைந்தது.
இச் சிரமதான நிகழ்வில் மேலதிக மாவட்ட அரசாங்க அதிபர் திரு.க.கனகேஸ்வரன்(நிர்வாகம்), மேலதிக மாவட்ட அரசாங்க அதிபர் திரு.எஸ்.குணபாலன், மாவட்ட செயலகத்தின் சிரேஸ்ட பதவிநிலை உத்தியோகத்தர்கள், பதவிநிலை உத்திளோகத்தர்கள், ஏனைய உத்தியோகத்தர்கள், கரைதுறைப்பற்று பிரதேச செயலகத்தின் உத்தியோகத்தர்கள், உள்ளுராட்சி திணைக்களம், கரைதுறைப்பற்று பிரதேசசபை , அரச மற்றும் தனியார் பேரூந்து அலுவலர்கள், பொலிஸ் மற்றும் படையினர் இணைந்து சிறப்பான முறையில் துப்பரவுப் பணியை செய்து முடித்தனர்.